Monday, 19 September 2016

தானியக் கிடங்கு பூச்சிக் கட்டுப்பாடு

சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும்.

விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் இராது.
தானியங்கள், மரங்கள் ஆகியவற்றை பெளர்ணமி அன்று அறுவடைச் செய்தால், தானியக்கிடங்கு பூச்சி தாக்குதல் ஏற்படும்.
சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்கவேண்டும்.
விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும்.
விதைகளை புங்கம் இலைகள் கலந்து பின் சேமிக்கலாம்.
1 கிலோ வசம்புத்தூளை 50 கிலோ தானியத்தோடு கலந்து சேமித்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
உணவுத்தானியங்களின் விதையை சேமிக்கும்போது, சேமிப்பு கலனில் முக்கால் பங்கு உயரத்திற்கு விதையை இட்டுப்பின் அதன் மீது சாதாரண துணியை பரப்பி பின் வேப்பிலை புங்கம் மற்றும் நொச்சி இலைகளின் மீது பங்குக்கு போட்டு, பின் அக்கலனில் வாய் வரை மணல் போடவேண்டும்.

10 சதவீதம் உப்புக்கரைசலை சாக்குப் பையை நனைத்து பின் காயவைத்து அதில் பயறுவகைகள் மற்றும் உணவுத்தானியங்களை சேமித்தால் பூச்சி தாக்கலைக் கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக விதைகளை கொட்டை/தோலோடு சேமித்தால், தானியக் கிடங்கில் தாக்கும் பூச்சிகளிலிருந்து தப்பலாம்.


Monday, 5 September 2016

Banana Fiber Rope Unit

This is a video on Banana fiber rope unit and its activities. Using banana fiber rope some handicrafts are made providing employment to the rural population and also using the fiber to get economic returns.