Tuesday, 23 August 2016

தண்ணீர் இருப்பை அறிதல்:

ஆலமரம் இருந்தால், நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
வேப்பமரத்தில் முடிச்சுகள் அதிகமாக காணப்பட்டால் அங்கு நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
எங்கு கரையான் புற்று உள்ளதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்.
விவசாயிகள், வேப்பக்குச்சி, உலோகம் போன்றவற்றை வைத்து பழைய முறைப்படி நீர் உள்ளதை அறிந்து, அங்கு கிணறு தோண்டுவார்கள். அத்தகைய குச்சியை கையில் வைத்து நடக்கும்போது, குச்சியானது தானாக சுழல ஆரம்பிக்கும் அதை வைத்து அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அதிகமான அளவு நிலத்தடி நீர் உள்ளதை அறியலாம்.
சில விவசாயிகள் காந்தக்கல்லை வைத்து நீர் உள்ளதை அறிய பயன்படுத்துவார்கள். காந்த துண்டை ஒரு நூலில் வைத்து கட்டிக் (அதை பெண்டுலம் போல்) கொண்டு, வயலில் நடந்தால் அந்தக் காந்தமானது தானாகவே அந்த இடத்தில் சுற்ற ஆரம்பிக்குதோ, அந்த இடத்தில் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என அறிந்து அவ்விடத்தில் கிணறு தோண்டுவார்கள்.

No comments:

Post a Comment